கால்பந்து ஜாம்பவான் பிலேயின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில்!

கால்பந்து உலகின் ஜாம்பவன் பீலேவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அவருக்கு இறுதி கட்ட சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீமோதெரபி சிகிச்சை

81 வயதாகும் பீலேவின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மட்டுமின்றி புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை பலவீனமடைந்து வந்தது. இதனால் செவ்வாய் கிழமை சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு, கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவரின் உடல்நலம் மோசமடைந்து வந்தது. தற்போது, அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இறுதி கட்ட சிகிச்சை

இதனால் ‘பலியேட்டிவ் கேர் எனப்படும் இறுதி கட்ட சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சையாக பார்க்கப்படும் இது உயிருக்கு அச்சுறுத்தல் அளிக்கும் நோய்களுக்கு அளிக்கப்படும்.

அத்துடன், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் கீமோதெரபி சிகிச்சை நிறுத்தப்பட்டு, வலி மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும்.

மட்டுமின்றி நோய்த்தடுப்பு சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அவரது நிலை தொடர்பில் தகவல் வெளியான நொடி முதல் கால்பந்து உலகம் சோகத்தில் மூழ்கி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *