வங்காள அணியை 32 ஓட்டங்களுக்குள் சுருட்டியது நியூசிலாந்து!

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதல் டி20 போட்டி

வங்கதேச மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடந்தது.

முதலில் ஆடிய நியூசிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் சோஃபி டிவைன் 34 பந்துகளில் 45 ஓட்டங்களும், பேட்ஸ் 33 பந்துகளில் 41 ஓட்டங்களும் எடுத்தனர். மேடி கிரீன் அதிரடியாக 23 பந்துகளில் 36 ஓட்டங்கள் விளாசினார்.

32 ஓட்டங்களில் சுருண்ட அணி! புயல்வேக பந்துவீச்சு | Banw 32 All Out By Nzw First T20

பின்னர் களமிறங்கிய வங்கதேச மகளிர் அணியின் விக்கெட்டுகளை ஹேலே ஜென்சென், தஹூஹூ இருவரும் மாறி மாறி வீழ்த்தினர்.

சுருண்ட வங்கதேசம்

மறுபுறம் பிரான் ஜோனஸும் தாக்குதல் கொடுக்க, வங்கதேச அணி 14.5 ஓவர்களில் 32 ஓட்டங்களுக்கு சுருண்டது.

32 ஓட்டங்களில் சுருண்ட அணி! புயல்வேக பந்துவீச்சு | Banw 32 All Out By Nzw First T20

தஹூஹூ 4 விக்கெட்டுகளும், ஹேலே ஜென்சென் 3 விக்கெட்டுகளும், பிரான் ஜோனஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறந்த வீராங்கனை விருதை தஹூஹூ வென்றார். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி 4ஆம் திகதி யூனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *