இலங்கையில் உலகின் மிகப்பெரிய விமானம்!

உலகின் மிகப்பெரிய உக்ரைனிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஆன்-225 (Antonov An-225) விமான வகையை சேர்ந்த மற்றொரு சரக்கு விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அன்டோனோவ் ஆன் – 225விமானத்தின் வகையை சேர்ந்த மற்றொரு சரக்கு விமானமான “antonov An-124-100” விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இன்று(27) அதிகாலை 6.35 இற்கு தரையிறங்கியுள்ளது.விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கும் விமான ஊழியர்கள் ஓய்வெடுத்து செல்லவும் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி செல்லும் வழியில் இவ் விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.இலங்கையில் இருந்து இன்று இரவு புறப்படவுள்ள இந்த விமானத்தில் மொத்தம் 24 பணியாளர்கள் உள்ளனர்.84 மீ நீளமும் 18 மீ உயரமும் கொண்ட அன்டோனோவ் ஆன்-225 அதிகபட்சமாக 640 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது.இது 88 மீ இறக்கைகள் மற்றும் அதன் தரையிறங்கும் கியரில் 32 டயர்களுடன் ஆறு என்ஜின்களால் இயக்கப்படுகிறது.1980 களின் பிற்பகுதியில் அன்டோனோவ் என்பவரால் இவ் விமானம் வடிவமைக்கப்பட்டது.உலகில் இதுவரை வடிவமைக்கப்பட்ட மிக நீளமான மற்றும் கனமான விமானம் இதுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *