இலங்கையிலும் ஒரு தாஜ்மஹால்!

இலங்கையிலும் ஒரு தாஜ்மகால் போன்ற காதல் சின்னம் இருப்பதை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. அதைப் பற்றி ஊடகங்களில் பேசப்படுவதும் இல்லை.

ஆனால் தன்னைப் பிரிந்து சென்ற காதல் தேவதையின் நினைவாக ஒரு ஆண் உருவாக்கிய காதல் நந்தவனம் ஒன்று இலங்கையில் இருப்பதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? சுற்றுலா செல்வதற்கு மிகவும் அழகான, அற்புதமான ஒரு தலம்.

கொழும்பில் இருந்து தெற்கு அதிவேகப் பாதையில் செல்வதாயின் வெலிபன்னயில் அதிவேகப் பாதைய விட்டு வெளியில் வந்து அளுத்கம, தர்கா நகர் கடந்து மத்துகம,யடதொல விதியில் சென்றால் இந்த இடத்தை அடைய முடியும்.

இலங்கையின் புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணரான ஜெப்ரி பாவாவின் சகோதரர், பேவிஸ் பாவா இதனை நிர்மாணித்துள்ளார். அவர் காதலித்த பெண் திடீரென்று அவரை விட்டு விலகிச் சென்ற துக்கத்தில் தனிமை, கவலை என்பவற்றை மறப்பதற்காக அதனை கலைத்துவ வடிவில் வெளிப்படுத்தியுள்ளார். அதன் பொருட்டு இந்த பூங்கா மற்றும் அங்குள்ள விடுதி உருவாக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *