ஆவி என்று தெரியாமல் வரவேற்ற மருத்துவமனை ஊழியரின் திகில் அனுபவம்!

மருத்துவமனை ஒன்றில், வந்திருக்கும் நோயாளி ஒரு ஆவி என்பதை அறியாமல், அவரை மருத்துவமனை ஊழியர் ஒருவர் வரவேற்கும் காட்சி ஒன்று வெளியாகி திகிலை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜென்டினா மருத்துவமனை ஒன்றில், வந்திருக்கும் நோயாளி ஒரு ஆவி என்பதை அறியாமல், அவரை மருத்துவமனை ஊழியர் ஒருவர் வரவேற்கும் காட்சி ஒன்று CCTV கமெராவில் சிக்கியுள்ளது.
வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் பாதுகாவலர் ஒருவர், பெண் நோயாளி ஒருவர் வருவதைக் கண்டதும் எழுந்து அவரை வரவேற்று அவரை மருத்துவர் அறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.சில மணி நேரத்திற்குப் பின், உள்ளே சென்ற நோயாளி வெளியே வராததால், அவரைத் தேடிச் சென்ற அந்த பாதுகாவலருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

ஆம், அப்படி யாரும் மருத்துவர்களைக் காண வரவில்லை என்றும், அவர் தேடிச் சென்ற பெயரைக் கொண்ட அந்த பெண் நோயாளி முந்தைய தினம்தான் மரணமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவிக்க, திகிலடைந்துள்ளார் அவர்.
ஆனால், மருத்துவமனையிலுள்ள கதவு தானாக திறப்பதையும், அந்த பாதுகாவலர் எழுந்து சென்று யாரிடமோ பேசுவதையும், சக்கர நாற்காலியைக் கொண்டு வர அவர் முயற்சிப்பதையும் CCTV கமெரா காட்சிகளில் காணலாம்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கதவில் பிரச்சினை இருப்பதாகவும், அது அடிக்கடி திறந்துகொள்ளும் என்றும், அதைப் பயன்படுத்தி அந்த பாதுகாவலர் prank செய்திருக்கலாம் என்றும் மருத்துவமனை செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்