நீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க யோசனை!

நாட்டில் குடிநீர் கட்டணத்தை மீண்டும் உயர்த்துவதற்கான யோசனை ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த யோசனை தொடர்பில் நீர்பாசனத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அண்மையில் குடிநீருக்கான கட்டணம் திருத்தப்பட்டிருந்த போதும், நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட செலவுகள் முன்பை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இப்போதும் ஒரு லீற்றர் குடிநீருக்கு 5 சதமே கட்டணமாக அறவிடப்படுவதாகவும், ஆனால் அதன் விநியோக செலவுகள் 12 ரூபாவுக்கும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

எனவே நீர்க்கட்டணத்தை 250 சதவீதத்தால் உயர்த்துவதன் ஊடாகவே இந்த நட்டத்தை ஈடுசெய்ய முடியும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *