இவ்வளவுதான் வாழ்க்கை!

இருபது வயதிலே இதுதான்
வேணும்னு தோணும்!

முப்பது வயதிலே இது வேணும்னு
தோணும்!

நாற்பது வயதிலே இதுவே போதூம்னு தோனும்!

ஐம்பது வயதிலே இது இல்லைனாக்கூட பரவாயில்லை னு
தோணும்!

அறுபது வயதிலே எது இல்லைனாலும் பரவாயில்லை னு
தோணும்!

எழுபது வயதிலே எதுவும் வேணாம் னு தோணும்!

காலமாற்றம்,கால சுழற்ச்சி
காலநேரம்,பிடிவாதம் எல்லாம்
முடக்குவாதமா மாறும்..ஆணவம்
எல்லாம் பணிவாக மாறும்.
அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி
மாறியிருக்கும்.மிரட்டல் எல்லாம்
கப்சிப் ஆகியிருக்கும்.

எது வேணும் னு ஆலாய்ப் பறந்தோமோ,அதையே தூரமாக
வைத்து பார்க்கத் தோணும்.
எதற்காக ஓடினோம்?எதற்க்காக
ஆசைப்பட்டோம்? எதற்காக எதைச்
செய்தோம்?என்ற காரணங்கள்
எல்லாமே, காலப்போக்கில்
மறந்து போகும்..மரத்துப் போகும்!

தீராப் பகையை தந்து வன்மத்தோடு
வாழ்ந்து,ஆடவிடுவதும் காலம்தான்..
அதன்பின் ஆட்டத்தை அடக்கி
மறதியை கொடுத்து,ஓரமாய்
உட்கார வைப்பதும் அதே காலம்தான்.

வெளியே மாளிகையாய்
தோற்றமளிக்கும் எதுவும்
உள்ளிருக்கும் விரிசல்களை
எடுத்துரைக்காது.

வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது
அவ்வளவு எளிதல்ல.
அதற்கு பல அவமானங்களை
கடந்திருக்க வேண்டும்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *