உலக நாடுகளுக்கு பாரிய நெருக்கடி ஏற்படும் அபாயம்!

உலக நாடுகளில் அதிகரிக்கும் பணவீக்கத்தால் அடுத்த ஆண்டு பல நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடும் என்று சிங்கப்பூரின் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.

சீன ஊடக நிறுவனம் ஒன்று வழிநடத்திய வர்த்தகத் தலைவர்கள் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.

உலகம் ஒரு சிரமமான காலக்கட்டத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே இந்தச் சூழ்நிலையைக் கடப்பதற்கு நாடுகள் ஒன்றாகப் பணியாற்ற வேண்டும் என்று தர்மன் கூறினார்.

ஒரு சிறிய நாடாக சிங்கப்பூர் பிரச்சினைகளை முன்கூட்டியே எதிர்நோக்கும் உத்தியைக் கொண்டிருக்க வேண்டும்.

அதே வேளையில் உலகளாவியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் குறிப்பிட்டார்.

மக்களின் நம்பிக்கையை வளர்ப்பது, ஊழியரணியில் திறன்களை மேம்படுத்துவது, புத்தாக்கத்தை ஏற்றுநடத்துவது ஆகியவற்றைக் கொண்டு சவால்மிக்க காலக்கட்டத்தை எதிர்நோக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *