நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் பரிதாப நிலையில் தனுஷ்க!

ஆஸ்திரேலியாவில் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு கிடைத்த தண்டனை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய நீதிமன்றினால் தனுஷ்க நேற்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, 150,000 அமெரிக்க டொலர் பெறுமதியான பிணையில் செல்ல நீதிவான் Janet Wahlquist அனுமதி வழங்கினார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர்,தனுஷ்கவுக்கான பிணை நிற்க முன்வந்திருந்தார்.

மேலும், தினசரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை வெளி இடங்களுக்கு செல்லக்கூடாது, முறைப்பாட்டாளருடன் எந்தவிதத்திலும் தொடர்பையும் ஏற்படுத்தக்கூடாது எனவும் பிணை நிபந்தனையில் நீதிவான் தெரிவித்துள்ளார்.

மேலும், டிண்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை அணுக்கக்கூடாது என்றும் நிபந்தனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிக்க இன்று சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்தில் நீதிவான் ஜெனட் வொல்கிஸ்ட் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

அங்கு அவர் பார்க்லியா சிறையிலிருந்து காணொளி தொழில்நுட்பம் மூலம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனை தெரிவித்த பொலிஸார் தரப்பு சட்டத்தரணி கெர்ரி-ஆன் மெக்கின்னன், முறைப்பாட்டாளரின் பாதுகாப்பிற்கு தனுஷ்கவினால் அச்சுறுத்தல் நேரலாம் என்று வாதிட்டார்.

இந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலிய பிரஜையாக இருந்தால் அவருக்கு எவ்வாறு பிணை கிடைக்கும் என்பதை பரிசீலிப்பதாக நீதிவான் கூறினார்.

எவ்வாறாயினும், தனுஷ்க சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி முருகன் தங்கராஜ், அவர் பிணை நிபந்தனைக்கு உட்பட்டு இருப்பார் எனக்கூறி, அவரை விடுவிக்க கோரினார்.

கைது செய்யப்பட்ட பின்னர் காவல்துறை விசாரணையில், தனுஷ்க பாதிக்கப்பட்டவரால் முன்வைக்கப்பட்ட சில குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினார். எனினும், அவர் வன்முறையில் ஈடுபடவில்லை.

குணதிலக்க தனது கடவுச்சீட்டை விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும், அவர் தப்பிக்கும் எண்ணத்தை வெளிகாட்டவில்லை என்றும் சட்டத்தரணி முருகன் தங்கராஜ் கூறினார்.

இருதரப்பு வாதங்களையும், பரிசீலித்த நீதிவான் பிணை அனுமதி வழங்கியுள்ளார்.

இதேவேளை, 31 வயதான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, இலங்கை கிரிக்கெட் அணியுடன் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தார்.

அதன்போது அவர் தங்கியிருந்த சிட்னியில் உள்ள ஹயாட் ரீஜென்சி விடுதியில் கடந்த 6 ஆம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டார்.

அவர்மீது சம்மதம் இல்லாத உடலுறவு உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *