குவைத்தில் 2017 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 7 பேருக்கு மரண தண்டனை!

2017ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையான குவைத்தில் ஏழு பேருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய உரிமைக் குழுவின் முறையீடுகள் இருந்தபோதிலும் மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தூக்கிலிடப்பட்டவர்களில் ஒரு எத்தியோப்பியா பெண்ணும் ஒரு குவைத் பெண்ணும் அடங்குவதாகவும், மூன்று குவைத் ஆண்கள், ஒரு சிரியர் மற்றும் ஒரு பாகிஸ்தானியர் என அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் 2017ம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி,  அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட ஏழு பேர் கொண்ட குழுவை தூக்கிலிட்ட பின்னர், முதன் முறையாக இந்த மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஹெராயின் கடத்தியதற்காக இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி அரேபியா கூறிய சில நாட்களுக்குப் பிறகு, போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை நிறைவேற்றுவதில் கிட்டத்தட்ட மூன்று வருட இடைவெளி முடிவுக்கு வந்தது.

செவ்வாய்கிழமை பிற்பகுதியில் “சர்வதேச மன்னிப்புச் சபை மரணதண்டனையை நிறுத்த வலியுறுத்தியது, இறுதியான கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான தண்டனை என்று அறிக்கை ஒன்றில் கூறியது.

குவைத் அதிகாரிகள் உடனடியாக மரணதண்டனைக்கு உத்தியோகபூர்வ தடையை ஏற்படுத்த வேண்டும் என்று அம்னெஸ்டியின் துணை பிராந்திய இயக்குனர் அம்னா குயெல்லாலி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் மரண தண்டனை பரவலாக காணப்படுகின்றது, குறிப்பாக ஈரான் மற்றும் சவுதி அரேபியாவில், மார்ச் மாதத்தில் ஒரே நாளில் 81 பேர் தூக்கிலிடப்பட்டனர், இது பெரும் சர்வதேச கண்டனத்தை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *