மக்களுக்கு உதட்டு முத்தம் கொடுத்த உலக அழகிக்கு கடும் எதிர்ப்பு!

தனது மகளின் 11வது பிறந்தநாளையொட்டி ஐஸ்வர்யா ராய் வெளியிட்டுள்ள புகைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

செல்ல மகள் ஆராத்யா

உலக அழகி ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனின் ஒரே மகள் ஆராத்யா, பொது இடங்களில் தன் மகளின் கைகளை எப்போதுமே பற்றிக்கொண்டு நடக்கும் ஐஸ்வர்யா, மகளுக்காக எதையும் பார்த்து பார்த்துச் செய்யக்கூடியவர்.

ஆராத்யாவின் 11வது பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராமில், என் காதல்.. என் வாழ்க்கை.. நான் உன்னை நேசிக்கிறேன்.. ஆராத்யா” என்ற கேப்ஷனுடன் மகளுக்கு உதட்டு முத்தம் கொடுத்தபடி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

இது வைரலான நிலையில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்திற்கு பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒருவர், இது இந்திய கலாசாரம் கிடையாது, வெட்கமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார், மற்றொருவர் பொறுத்தமற்ற செயல் என தெரிவித்துள்ளார்.

“நீங்கள் உலகின் செல்வாக்கு மிக்கவர் என்று தெரியும், உங்களுக்கு பொறுப்புகள் இருக்கிறது, இப்படி செய்யலாமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

குவியும் ஆதரவுகள்
”அம்மா- மகளின் அழகான புகைப்படம்” “குட்டி ஐஸ்வர்யா ராய்” ”அம்மாவின் அன்பிற்கு ஈடுஇணையில்லை, எப்போதும் இந்த பாசம் நீடிக்க வேண்டும்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

மற்றொருவரோ, ”2022ம் ஆண்டின் சிறந்த புகைப்படம் இது, அம்மா- மகளுக்கு இடையேயான முத்தம் இது, எதையும் எதிர்பார்க்காமல் கிடைக்கும் அன்பு” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *