ஜேர்மனியை குறிவைக்கும் ரஷ்யா!

ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுக்கும் முடிவுக்கு ரஷ்யா முன்னெப்போதும் இல்லாத வகையில் தயாராவதாகவும், ஜேர்மனி எந்த நேரத்திலும் மொத்தமாக அழிக்கப்படலாம் எனவும் கசிந்த தகவலால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

குறித்த தகவலின் அடிப்படையில், ஜேர்மனியின் முக்கிய தளபதிகள், நாட்டு மக்கள் ரஷ்யாவுடனான போருக்கு தயாராக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனிடையே, உக்ரைன் மீதான போரானது நேட்டோ அமைப்புடன் இணைந்து உலகளாவிய போராக மாறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. ரஷ்யாவின் ரகசிய நகர்வுகள் குறித்து ஜேர்மனி தயாரித்துள்ள 68 பக்க ஆவணங்கள் Der Spiegel வெளியிட்டுள்ளது.

கசிந்த அந்த ஆவணங்களில், நாட்டின் உயர்மட்ட தளபதிகளில் ஒருவரான எபர்ஹார்ட் சோர்ன் நாட்டின் இராணுவத்தை போர்க்கால அடிப்படையில் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளதும் கூறப்படுகிறது.மட்டுமின்றி, ஜேர்மன் இராணுவத்தை முழுமையாக மாற்றியமைக்கவும், போருக்கு தன்னை தயார்படுத்திக்கொள்ளவும் தளபதி சோர்ன் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், ஜேர்மனி மீதான தாக்குதல்கள் முன்னறிவிப்பின்றி நிகழலாம் எனவும் பாரிய சேதத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

ஜேர்மனியை

ஜேர்மனியை பொறுத்தமட்டில் செயற்பாட்டில் 183,638 ராணுவ வீரர்களும், 949,000 வீரர்கள் இருப்பும் உள்ளனர். ஆனால் ரஷ்ய ராணுவத்தில் செயற்பாட்டில் 1 மில்லியன் வீரர்களும், இருப்பில் 2 மில்லியன் வீரர்களும் உள்ளனர். மேலும், மாலியில் அனுப்பப்பட்டுள்ள வீரர்களையும் திரும்ப அழைக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *