கணவன் துரோகம் செய்ததால் பொம்மையை திருமணம் செய்த பெண்!

மேலை நாடுகளில் மரத்தை திருமணம் செய்யும் பெண்கள், ஆவியைத் திருமணம் செய்யும் பெண்கள், ஏன், தன்னைத்தான் திருமணம் செய்துகொள்ளும் பெண்கள்கூட உண்டு.

அவ்வகையில், Meirivone Rocha Moraes (37) என்ற பெண், Marcelo என்ற பொம்மையைத் திருமணம் செய்துகொண்டார்.

மகள் தனிமையாக இருப்பதால் வருந்திய தாய்
தன் மகள் தனியாக இருப்பதாக அவரது தாய் வருத்தப்பட்டதால், Marcelo என்ற பொம்மையைத் திருமணம் செய்துகொண்டார் Rocha.

பிறகு தம்பதியருக்கு ஒரு குழந்தையும் பிறந்ததாக தெரிவித்துள்ள Rocha, அந்த குழந்தைக்கு Marcelinho என்று பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் குழந்தை Marcelinhoவுக்கு உடல் நலமில்லாததால் மூன்று நாட்கள் Rocha மருத்துவமனையில் தங்க, அப்போது Marcelo தனக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார்.

மற்றவர்கள் Marcelo வேறு பெண்களுடன் ஹொட்டலில் அறை எடுத்துத் தங்குவதை தாங்கள் பார்த்ததாக Rochaவிடம் கூறியபோது, முதலில் அவர் அதை நம்பவில்லையாம். ஆனால், அவரது மொபைலை எடுத்துப்பார்க்கும்போதுதான் அது உண்மை என்பது தெரியவந்ததாம் அவருக்கு.

ஆகவே, தங்கள் திருமண உறவு நூலிழையில் ஊசலாடிக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் Rocha. ஆனாலும், தன் கணவனான Marcelo தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சியதால் அவருக்கு இன்னொரு வாய்ப்புக் கொடுத்திருப்பதாகவும், அவர் மீண்டும் துரோகம் செய்தால் அவரை மன்னிக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார் Rocha.

என்ன, Rochaவின் கதையைக் கேட்டு தலை சுற்றுகிறதா?

ஆனால், Rocha தன் கதையை டிக்டாக்கில் பகிர்ந்துகொள்ள, அது 1.6 மில்லியன் பார்வைகளையும், 120,000க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *