இந்திய பாகிஸ்தான் போட்டியில் சர்ச்சைக்குள்ளான நோபோல்!

நேற்றைய இந்திய பாகிஸ்தான் போட்டியின் நோபோல் சர்ச்சை பெரும் பேசு பொருளானது.

நோ பால் சர்ச்சை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாஷிம் அக்ரம் கூறும்போது,

சாதாரணமாக பார்க்கையில், பந்து தணிந்து வருவது போல் தோன்றுகிறது. பேட்ஸ்மேன் நடுவரிடம் நோ பால் கேட்பது வழக்கம் தான். ஆனால் நவீன நுட்பங்கள் தற்போது உள்ளன. இது போன்ற பெரிய போட்டிகளில் கள நடுவர் மூன்றாம் நடுவரிடம் கேட்டு பின்னர் தீர்ப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நோ பால் சர்ச்சை குறித்து வாக்கார் யூனிஸ் கூறும்போது, கள நடுவர் நோ பால் என்று உடனடியாக வழங்கியிருக்க வேண்டும். ஆனால், லெக் அம்பயர் கோலி அடித்த பந்தை காண பின்னால் திரும்புவதை பார்க்க முடிகிறது. இது நோ பாலா, இல்லையா என்பதை கூற நான் விரும்பவில்லை. நோ பால் கேட்பது விராட் கோலியின் உரிமை. ஆனால் கள நடுவர்கள் சர்ச்சையான நேரங்களில் மூன்றாம் நடுவரிடம் விவாதித்து இருக்கவேண்டும். அதற்காக தான் மூன்றாம் நடுவர் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு முன்னாள் வீரரான சோயப் மாலிக் கூறுகையில், உங்களுக்கு சரியான தெளிவு இல்லாத போது, ​​​​நீங்கள் மூன்றாவது நடுவரின் உதவியைப் பெற வேண்டும், குறிப்பாக நெருக்கடியான சூழ்நிலையில் இவ்வளவு பெரிய போட்டியில். யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம். ஆனால் அவர்கள் மூன்றாவது நடுவரைக் கலந்தாலோசித்திருக்க வேண்டும். மறுபரிசீலனைக்குப் பிறகு முடிவு எடுக்கப்பட்டால். அது நன்றாக இருந்திருக்கும் என்று நாங்கள் பார்த்தோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *