மஞ்சள் பழங்களின் மகிமைகள்!

ஒவ்வொரு நிறத்துக்கும் ஒவ்வொரு குணம் உண்டு என்பதை இன்றைய நவீன மருத்துவம் நன்கு புரிந்துவைத்திருக்கிறது. ஆரோக்கியமான உணவுகள் என்பதில் அவற்றின் நிறத்துக்கும் பங்கு உண்டு. மஞ்சள் நிறக் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு என்ன சிறப்பு என்று இங்கு காண்போம்.உணவுகளில் இருக்கும் நிறங்களும் ஆரோக்கியம் அளிக்கக் கூடியவையே. அப்படியான நிறங்களில் மஞ்சள் நிறங்களை கொண்ட பழங்கள் உடலுக்கும் சருமத்துக்கும் செய்யும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

மஞ்சள் நிற பழங்கள் குறிப்பிட்ட ஊட்டச்சத்து நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது. அன்றாட உணவுகளில் இதை தேடித் தேடி சாப்பிட முடியுமா என்பவர்கள் எங்கேயும் போக வேண்டியதில்லை. நமது அருகிலேயே ஏராளமான மஞ்சள் பழங்கள் உள்ளது. அவை தரும் நன்மைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்.

​உணவில் மஞ்சள் நிற நன்மைகள்

மஞ்சள் பழங்கள் என்றதும் எல்லோருக்கும் மாசில்லாத, துளி கருப்பு புள்ளியும் இல்லாத எலுமிச்சை, வாழைப்பழம் நினைவுக்கு வரும். உண்மையில் மஞ்சள் நிறம் என்பது மென்மையான ஆரஞ்சு வரை பரவியுள்ளது.மஞ்சள் பழங்கள் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் சிஆகியவற்றால் நிரம்பியுள்ளது. மேலும் இதில் வைட்டமின் சி தவிர்த்து ஃப்ளவனாய்டுகள், லைகோபீன், பொட்டாசியம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை நிரம்பியுள்ளது.

இது எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சியை ஆரோக்கியமாக உறுதியாக வைத்திருக்க செய்கிறது. மேலும் இது இதயம், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளையும் மேம்படுத்த செய்கிறது.​

மஞ்சள் நிறங்களை கொண்ட பழங்கள்

எலுமிச்சை, மஞ்சள் ஆப்பிள், மஞ்சள் தர்பூசணி , மாம்பழம், அன்னாசிப்பழம், வாழைப்பழம், பாதாமி, பீச், பப்பாளி, க்ரேப் ஃப்ரூட், கோல்டன் கிவி ஃப்ரூட், ஸ்டார் ஃப்ரூட், மஞ்சள் திராட்சைப்பழம், முலாம் பழம் காய்கறிகளில் மஞ்சள் குடைமிளகாய், பூசணிக்காய், மக்காச்சோளம் போன்றவை நமக்கு எளிதாக கிடைக்கக் கூடியவை தான். இதில் இன்னும் பல பழங்கள் விடுபட்டிருக்கவும் வாய்ப்புண்டு என்பதால் மஞ்சள் நிற பழங்கள் காய்கறிகளில் உங்கள் நினைவுக்கு வருவதை நீங்கள் பட்டியலிட்டு வைத்து கொள்ளுங்கள்.

​வைட்டமின் சி

மஞ்சள் பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. இது உங்களது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த செய்கிறது. சருமத்தில் கொலாஜன் சுரப்பு உருவாவதை ஊக்குவிக்கிறது. இந்த கொலாஜன் உற்பத்தி சீராக இருந்தால் சருமம் நெகிழ்வாக இருக்கும். கொலாஜன் சுரப்பு குறையும் போது சருமம் விரைவில் சுருக்கம் விழுந்து வயோதிக தோற்றத்தை அடைவதோடு சருமம் பொலிவும் இழக்ககூடும். வைட்டமின் சி நிறைந்த மஞ்சள் நிற பழங்கள் கொலாஜன் உற்பத்தியை சீராக்குவதன் மூலம் என்றும் இளமையாக உலாவரலாம்.

எலும்புகள் வலுவாகிறது

எலும்புகள் மென்மையாதல் என்பது வலிமையில்லாத நிலை. இதனால் மூட்டுகளில் வலி உபாதை உண்டாகும். உடலின் ஆரோக்கியம் எலும்புகளின் வலுவில் தான் உண்டு. எலும்பை ஆரோக்கியமாக வைக்க வைட்டமின் சி செறிவும் அவசியம். கால்சியம் மற்றும் வைட்டமின் டி உடன் வைட்டமின் சி யும் எலும்புகளை உருவாக்க வலுப்படுத்த உதவுகிறது.

மஞ்சள் நிறப் பழங்கள் உங்கள் மூட்டுகளையும் பத்திரமாக வைத்திருக்க செய்யும். எலும்பு முறிவுகளுக்கு பிறகு இழந்த சத்தை திரும்ப பெறுவதற்கு இந்த மஞ்சள் பழங்களில் இருக்கும் ஊட்டச்சத்துகள் பெரிதும் உதவும்.

​கண்களுக்கு நன்மை செய்கிறது

மஞ்சள் நிறத்துடன் கூடிய பழங்களில் பீட்டா கரோட்டின் உள்ளது. வைட்டமின் ஏ நிறைவாக பெறப்படுவதால் இந்த வைட்டமின் சத்து அதிகம் வேண்டும். நமது உறுப்பான கண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவையாக இருக்கிறது. வைட்டமின் ஏ சருமம் போன்று கண்களது ஆரோக்கியத்துக்கு முக்கியமானதாக உள்ளது. இது மாகுலர் சிதைவு அபாயத்தையும் குறைக்க செய்கிறது.

​இதயத்துக்கு நன்மை செய்பவை

மஞ்சள் நிற பழங்கள் காய்கறிகள் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி போன்றவற்றின் நிறைவான ஆதாரங்கள். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது.

இந்த பழங்கள் இதயத்துக்கு நன்மை செய்ய கூடியவை. இது உடலின் ஆரோக்கியமான பி ஹெச் அளவை பராமரிக்கவும் செய்கிறது. உடலில் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க கூடியது.

​செரிமானத்துக்கு நன்மை செய்யும்

மஞ்சள் நிற பழங்கள் குறிப்பிட்ட அளவு தன்னுள் நார்ச்சத்தை அடக்கியுள்ளது. உங்கள் செரிமான அமைப்பை சீராக இயக்கவும், சுத்தமாக வைக்கவும் உதவுகிறது. இது மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துகொள்ளவும் செய்யும்.

இத படிச்சா, இனி கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் தான் விரும்பி சாப்பிடுவீங்க…

மஞ்சள் நிற பழங்கள் ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த ஆதாரங்களாகவே இருக்கிறது. இது புற்றுநோயை எதிர்த்து போராடும் குணங்களை கொண்டவையும் கூட. இனி பழங்கள், காய்கறிகள் வாங்கும் போது மஞ்சள் நிறங்களிலும் கவனம் செலுத்துங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *