இலங்கை இளைஞர்களுக்கு ஐரோப்பிய நாட்டில் வேலைவாய்ப்பு!

இலங்கை இளைஞர்களுக்கு ஐரோப்பிய நாடு ஒன்று தொழில் வாய்ப்புகள் பலவற்றை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஐரோப்பிய நாடான ருமேனியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களில் பணிபுரியும் திறனும் வாய்ப்பும் இருப்பதாக இலங்கைக்கான ருமேனியத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்ட பாரிய அளவிலான இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகள் வழங்க திட்டமிட்டடுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் அலரிமாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த போதே தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பல முக்கிய சர்வதேச நிறுவனங்கள் ருமேனியாவில் கணிசமான முதலீடுகளைச் செய்து வருகின்றன, மேலும் இலங்கை உட்பட ஆசியாவில் இருந்து திறமையான தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் இருக்கும்.

மேலும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ருமேனிய வணிகங்கள் இரண்டும் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைவாய்ப்பை வழங்கும் திறனைக் கொண்டுள்ளன என தூதுவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் ஒரு பரிமாற்ற விஜயத்தின் போது உயர்கல்வி ஒத்துழைப்பை ஆராய்வதற்காக இலங்கையில் இருந்து கல்வியாளர்கள் குழுவொன்று விரைவில் ருமேனியா பயணிக்க தூதுவர் தெரிவித்தார். 

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்காக ருமேனியா இலங்கையுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *