கொழும்பில் பாரிய தீ விபத்து 50 வீடுகள் எரிந்து நாசம்!

கொழும்பு தொட்டலங்கா – காஜிமாவத்த பகுதியில் அமைந்துள்ள தோட்டத்தில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியில் நேற்றிரவு பாரிய தீ தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள் அந்தந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை, சுமார் 60 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, காஜிமாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு கொழும்பு மாவட்டச் செயலாளர், ஆயுதப்படை, தீயணைப்புப் படை, சுகாதாரத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களின் தேவைகளைக் கவனிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இன்றிரவு முதல் அவர்களுக்கான வசதிகளை துரிதமாக வழங்குமாறும் ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, தீயை அணைக்க தேவையான அதிகபட்ச தலையீட்டை வழங்கவும், தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக வழங்கவும் அந்த அனைத்து துறைகளும் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன.

குறிப்பாக இந்நிலைமையினால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் தாய்மார்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்குத் தேவையான வசதிகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி உரிய திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *