சார்ல்ஸ் – கமீலா தம்பதிக்கு ரகசியமாக பிறந்த மகன்!

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் – கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தன்னை சொல்லி கொள்ளும் நபர் மீண்டும் அது குறித்து பேச தொடங்கியுள்ள நிலையில் சார்லஸ் அது தொடர்பில் பதில் அளிக்காமல் மெளனம் காத்து வருகிறார்.

அவுஸ்திரேலியாவில் வசிப்பவர் Simon Dorante-Day (56). இவர் சார்லஸ் – கமீலா தம்பதிக்கு பிறந்த மகன் என தொடர்ந்து கூறி வருகிறார். அதன்படி தனது வளர்ப்பு பாட்டி மரணப்படுக்கையில் இருந்த போது தன்னிடம், நீ சார்லஸ் – கமீலாவிற்கு ரகசியமாக பிறந்த மகன் என கூறியதாக தெரிவிக்கிறார்.

மன்னர்

ஆனால் இளவரசர்கள் வில்லியம் – ஹரியின் தந்தையான மன்னர் சார்லஸ் Simon கூற்றுகளை புறக்கணித்து அது தொடர்பில் எதுவும் அறிக்கைகள் வெளியிடாமல் உள்ளார்.ஏனெனில் இது குறித்து பேசி ஊடக விளம்பரங்களை வழங்க சார்லஸ் விரும்பவில்லை. சமீபத்தில் கூட Simon கமீலாவின் கர்ப்பகால புகைப்படம் என கூறி ஒரு புகைப்படத்தை கசியவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் DNA பரிசோதனை மூலம் உண்மையை உலகிற்கு கொண்டு வர அவர் விரும்புவதாக தெரிகிறது. இருப்பினும், மன்னர் சார்லஸ் அவரது எந்த கூற்றுக்கும் பதிலளிக்கவில்லை. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *