டயானாவின் இறுதி நாட்கள் வரை அவருக்கு இருந்த நோய்!

பிரித்தானிய இளவரசி டயானா தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி முழுவதும் ரோஸாசியா என்ற சரும பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார் என தெரியவந்துள்ளது.

பிரித்தானிய மன்னர் சார்லஸின் முதல் மனைவி டயானா. அவருக்கு சார்லஸுக்கும் 1996ல் விவாகரத்து ஆன நிலையில் 1997ல் கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்.

ராஜ குடும்பத்தில் இருந்து பிரிந்த போதிலும் பிரித்தானிய மக்கள் டயானாவை மிகவும் நேசித்து அவர் மீது அன்பு செலுத்தினார்கள். தற்போது வரை அந்த நேசம் தொடர்கிறது என கூறினால் அது மிகையாகாது..!

நமது சருமத்தின் இரண்டாவது அடுக்கில் ரத்தக் குழாய்கள் காணப்படுகின்றன. அவை சிலருக்கு வழக்கத்துக்கு மாறாக அதிகமாக விரிவடையும். அப்படி விரிவடையும் ரத்தக்குழாயின் வழியாக ரத்தம் அதிகமாகச் செல்லும். அதிகமாக ரத்தம் செல்லும்போது வெளித்தோற்றத்தில், அதாவது சருமப் பகுதி முழுவதும் இளஞ்சிவப்பாகத் தெரியும். இதுதான் `ரோஸாசியா’ என்று கூறப்படுகிறது.

இது சருமத்தில் ஏற்படும் பிரச்னை அல்ல, உள்ளே இருக்கும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பிரச்னை. `ரோஸாசியா’ நோய் வருவதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகக் கண்டறியப்படவில்லை. 

இந்த நோய் பாதிப்பு காரணமாக டயானா மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகு சாதன பொருட்களை மட்டுமே பயன்படுத்தி வந்தார்.

ஒவ்வொரு நாளும் மேக்கப் போட்டதை நாள் முடிவில் டயானா நிச்சயம் கலைக்க வேண்டும், மீண்டும் அடுத்தநாள் மேக்கப் போடுவதற்கு முன்னர் அவர் முகத்தை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும். ரோஸாசியா பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அவர் இதை தான் இறுதிவரை கடைபிடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *