இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவை குறைத்து வருவதாக ஆய்வில் தகவல்!

இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் எனவும், அவர்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டத்தை மேற்கோள்காட்டி ReliefWeb இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

1996 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மனிதாபிமான தகவல் இணையத்தளமான ReliefWeb, இலங்கையின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கு நெருக்கடி தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, நாட்டில் சுமார் 5.3 மில்லியன் மக்கள் உணவைக் குறைத்து வருகின்றனர் அல்லது தவிர்க்கிறார்கள் மற்றும் குறைந்தது 65,600 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர்.

உயர் பணவீக்கம், வாழ்வாதார இழப்பு, உற்பத்தித்திறன் குறைதல் மற்றும் உணவு, மருந்து, சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக நிலைமை மோசமடையக்கூடும் என்று ReliefWeb அறிக்கை கூறியுள்ளது.

வெளிநாட்டு உதவியின்மை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரிசி போன்ற முக்கிய உணவுகளின் அறுவடை வீழச்சி காரணமாக ஒக்டோபர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை நாட்டில் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *