துப்பரவு தொழிலாளரை திருமணம் செய்த பெண் டாக்டர்!

மருத்துவமனையில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணிபுரியும் நபர் ஒருவரை அதே மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பெண் திருமணம் செய்துகொண்டுள்ள சம்பவம் வைரலாக பரவி வருகிறது.
பாகிஸ்தானின் கிஷ்வர் சாஹீபா என்ற பெண் டாக்டர், திபால்பூரில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். அங்கு வேலை சுத்தம் செய்யும் தொழிலாளியான ஷசாத் என்பவரின் மீது காதல் வயப்பட்டுள்ளார்.
எனக்கு வாழ்க்கை கொடுத்தார்
முதன் முதலில் கிஷ்வர் என்ற பெண் டாக்டர் தான் ஷசாத்திடம் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கேட்டப்போது, “நான் இதை எதிர்பார்க்கவில்லை. கிஷ்வர் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தது.
நான் அங்கு அறைகளை சுத்தம் செய்துகொண்டு, அந்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்களுக்கு டீ பரிமாறும் சேவை செய்து கொண்டு இருந்தேன்.
ஒரு நாள் என்னை அணுகிய கிஷ்வர் நான் இல்லாத நேரங்களில் என்னை தொடர்பு கொள்வதற்காக மொபைல் நம்பரை கேட்டறிந்துள்ளார்.
தானும் நம்பரை கொடுத்தேன். அதன் பின் ஒரு நாள் என்னை அவருடைய ரூமிற்கு அழைத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.
இது நான் சற்றும் எதிர்பாராததாகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகவும் இருந்தது. அதன்பிறகு சில நாட்கள் நான் மருத்துவமனைக்கு வரவில்லை. உண்மையில் அந்த இடைப்பட்ட நாட்களில் எனக்குப் பயத்தினால் காய்ச்சல் ஏற்பட்டது என்பதை அவர் தன்னுடைய யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

திருமணம்
பின்னர், இருவரும் சந்தித்துக் கொண்டு திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளனர். திருமணத்திற்கு பின் கிஷ்வர் வெளியேறிய பின், . தற்போது அவர்கள் அதே ஊரிலேயே கிஷ்வருக்காக ஒரு கிளினிக் நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதுமட்டுமில்லாமல் இந்த ஜோடிகள் ஒரு யூடியூப் சேனலை உருவாக்கிக் கொண்டு அதில் தங்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பற்றிய பல முக்கிய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டு பார்வையாளர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அவரை கண்டு ஆச்சரியப்பட்டேன்
இதைப்பற்றி டாக்டர் பெண் கிஷ்வர் தெரிவிக்கையில், ஷசாத்தை முதன்முதலில் சந்தித்தபோது, அவர் ஒரு ஒரு சுகாதாரப் பணியாளராகத் தோன்றவில்லை.
அவர் சொந்தமாகத் தொழில் செய்து வருவதையும் எளிமையாக இருப்பதையும் அறிந்து ஆச்சரியப்பட்டேன்.