பாடசாலை மாணவர்களுக்கிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்!

கோவிட் நோய் தவிர, இந்த நாட்களில் பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவுகிறது என அரச மருத்துவ அலுவலர்கள் மன்றத்தின் செயலாளர் வைத்தியர் கமல் ஏ. பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அது குறித்து மேலும் பேசிய அவர், “இப்போது பலர் கோவிட் தொற்று குறித்து மறந்துவிட்டனர்.

பாடசாலை மாணவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் - பெற்றோர்களுக்கு அவசர அறிவிப்பு | Viral Fever Spread Among School Students

மாணவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் 

இருப்பினும், நாள் ஒன்றுக்கு சுமார் நூறு கோவிட் நோயாளிகள் பதிவாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளைக்கு 5 முதல் 6 கோவிட் இறப்புகள் பதிவாகின்றன. பொதுமக்கள் இதில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தற்போது பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பா்சாலைக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *