11 முறை திருமணம் 28 முறை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பெண்!

பெண்ணொருவருக்கு இதுவரை 11 முறை திருமணம் நடைபெற்றுள்ளதோடு, 28 முறை நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Monette Dias (53) என்ற பெண் அமெரிக்காவின் Utah-வை சேர்ந்தவர் ஆவார். இவர் இதுவரையில் 11 முறை திருமணம் செய்துள்ளார், இதோடு 28 முறை Monette-க்கு திருமண நிச்சயதார்த்தமும் ஆகியுள்ளது.

அவர் தனது முதல் காதலனை தொடக்க பள்ளியில் சந்தித்தார். Monetteவுக்கு 15 வயதான போது அவரின் தந்தை விபத்தில் உயிரிழந்தார். அப்போதில் இருந்து தனக்கு உறவு என்று யாரும் இல்லை என ஏங்கிய அவர் குடும்பம் என்ற உறவுகளை பெற கணவர் என்ற பந்தத்தை ஏற்படுத்தி கொள்ள முடிவெடுத்தார். அப்போது தான் அவருக்கு முதல் திருமணம் நடந்தது.

Monette கூறுகையில், இதுவரை நான் 28 முறை காதலை சொல்லி உள்ளேன். எனது கனவு முழுவதும் எனது திருமணம், மற்றும் என் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி தான் இருக்கும் என கூறுகிறார்.

Monette-ன் ஒரு திருமணம் குறைந்தபட்சம் 4 மாதங்களும், அதிகபட்சம் 10 ஆண்டுகளும் நீடித்துள்ளது. உண்மையான அன்பு கிடைக்கும் வரை திருமணம் செய்வதை நிறுத்த மாட்டேன் என என்கிறார் Monette.

Monette தொடர்ந்து பேசுகையில், என் பல திருமணங்கள் தோல்வியில் முடிந்த போதும் உண்மையான காதல் மற்றும் நேசத்தை நான் இன்னும் நம்புகிறேன் என கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *