தந்தையின் கனவை நினைவாக்க 364 பெண் குழந்தைகளை தத்தெடுத்த மகன்!

இராணுவத்தில் பணிபுரிந்த தன்னுடைய மறைந்த தந்தையின் கனவுகளை நிறைவேற்ற ராஜஸ்தான் லோசலைச் சேர்ந்த மோகன்ராம் ஜாகர், 364 ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து,  தனது சொந்த செலவில் அவர்களுக்கு கல்வி கற்பிக்கிறார். அதில் கண்பார்வை அற்ற குழந்தைகளும் உள்ளனர். 1100 குழந்தைகளுக்கு ‘பாலிதின் முக்த் பாரத்’ மற்றும் ‘பேட்டி படாவோ’ பிரச்சாரத்தின் உறுதிமொழியையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். எல்லையில், நாட்டின் எல்லையைக் காக்கும் காவலர்களில் ஒருவரான மங்கூர் ராம் ஜாகர் ஓய்வு பெறும்போது, ​​நாட்டின் பெண் குழந்தைகளுக்கு சேவை செய்யும் பொறுப்பை அவரது மகன் மோகன்ராமிடம் ஒப்படைத்தார்.

இன்று மோகன்ராம் தந்தையின் அந்த கனவை நனவாக்குவதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அவரது தந்தை தனது மகள்களின் கல்வி விருப்பங்களை நிறைவேற்றாமலே  இறந்து விட்டார். ஆனால் தனது வறுமையின் காரணமாக படிப்பை முடிக்காத ஒருவர், இன்று 364 பெண் குழந்தைகளை தத்தெடுத்து அறக்கட்டளையின் மூலம் கல்வி வழங்கி வரும் மோகன்ராம் வருங்கால தலைமுறைக்கு ஒரு முன்னோடி. இவர் கல்வி உதவி செய்த 10 பெண்கள் அரசு சேவைகளில் மருத்துவர்கள், கான்ஸ்டபிள்கள், பஞ்சாயத்து உதவியாளர்கள், ஏ.என்.எம், எல்.டி.சி போன்றவர்களாக பணிபுரிகிறார்கள்.

தந்தையின் கனவுக்கு இத்தகைய குழந்தைகள் ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு அக்டோபரில் மோகன்ராம் 1100 பெண் குழந்தைகளை ஒன்று சேர்த்தார். இந்த சந்தர்ப்பத்தில், மகள்களுக்கு பாலிஎதிலீன் இல்லாத இந்தியா மற்றும் பேட்டி படாவோ, பிரச்சாரத்தின் வெற்றி பற்றிய உறுதிமொழி எடுக்க வைத்தார். இது மட்டுமல்லாமல், இங்கே ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தனில் தத்தெடுக்கப்படும் முஸ்லீம் பெண் குழந்தைகள், காவல்துறையினருக்கு ராக்கியைக் கட்டி, பெண்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ளச் செய்கிறார் மோகன்ராம்.

மோகன்ராம் ஜாகர், ராஜஸ்தானில் உள்ள லோசலில் வசிக்கிறார், அவரது தந்தை மங்குராம் ராம் ஜாகர் 1989ல் இராணுவத்தில் இருந்து நைப் சுபேதராக ஓய்வு பெற்றார். 1997 ஆம் ஆண்டில், பன்ஷிவாலா மகளிர் கல்லூரியில் காவலராகப் பணியாற்றத் தொடங்கினார். அந்த நாட்களில், பள்ளியின் டெபாசிட் கட்டணத்தை கட்ட முடியாத பல குழந்தைகள் படிப்பை நிறுத்துவதை அவர் கண்டார். ஒரு நாள், திடீரென்று அவரது மனதில் ஒரு எண்ணம் எழுந்தது, அத்தகைய குழந்தைகளின் கல்விக்கு அவர் தனது சொந்த நிலைமையில் இருந்து ஏன் உதவிகளைச் செய்யக்கூடாது என்று  எண்ணினார், அதனால் அத்தகைய குழந்தைகளின் எதிர்காலம் நாட்டின் எல்லையைப் போலவே பாதுகாக்கப்படலாம் என முடிவெடுத்தார்.

அடுத்தது, அவர் வீட்டில் கலந்தாலோசித்த பின்னர் 2014 ஆம் ஆண்டில் ‘ராஜ் துரஸ்ட் சிக்ஷா’ (RDSNGO) என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கினார்.

ஆரம்பத்தில், மாவட்ட கல்வி அலுவலர் தேவல்டா சந்த்வானி முன்னிலையில் 11 ஏழைக் குழந்தைகளுக்கு அறக்கட்டளையின் மூலம் உதவினார்கள்.மோகன்ராமின் தந்தை 2017 ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இப்போது அறக்கட்டளை மூலம்  ஏழைக் குழந்தைகளை கற்பிக்க வைப்பது  அவரது  பொறுப்பாகும் . தற்போது, ​​தத்தெடுக்கப்பட்ட 364 குழந்தைகளின் கல்வி ‘Raj Correct Education’ அறக்கட்டளையின் உதவியுடன் நடந்து வருகிறது. அறக்கட்டளையின் மூலம் படித்து முடித்து தற்போது 10 பெண்கள் அரசாங்க வேலையை பெற்றுள்ளனர். சந்தோஷ் கத்வா மற்றும் ராஜ்புராவின் ரவீனா டெல்லியில் கான்ஸ்டபிளாக பணிபுரிகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, RDS அறக்கட்டளை (லோசல்) தத்தெடுத்த மகள் சரிதா குமாவத், தடகளத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்பட்டார். சிகாரில் நடைபெற்ற போட்டியில் அவர் நிறுவனத்தை முதலிடத்தில் வரவைத்தார்.

அதே மாதிரி, சென்னையில் தத்தெடுக்கப்பட்ட மம்தா பாட்டி என்ற பார்வையற்ற பெண்ணுக்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பார்வை கிட்டியது. இது பற்றி மோகன்ராம் கூறியதாவது,  “ஒரு குழந்தை ஏழைக் குடும்பத்தில் பிறந்தது பாவம் அல்ல. பெண் குழந்தையை பெற்றெடுத்த அந்த பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் பார்வையற்ற பெண் குழந்தைகளை தத்தெடுத்து படிக்க  வைத்து வாழ்வு கொடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *