ஆண்களின் விந்தணுவில் நகை செய்து அசத்தும் பெண்!

கனடாவை சேர்ந்த அமாண்டா பூத் என்ற பெண்மணி ஆண்களின் விந்தணு, தாய்ப்பால், உயிரிழந்தவர்களின் சாம்பல் ஆகியவற்றை கொண்டு நகை செய்து விற்பனை நடத்தி வருகிறார்.

மோதிரங்கள், செயின்கள், வளையல்கள் என அனைத்து ஆடம்பர மற்றும் அலங்கார நகைகள் உலக மக்கள் அனைவராலும் விருப்பத்துடன் வாங்கப்பட்டு அணியப்படுகிறது.

அதிலும் நமது மனதிற்கு நெருக்கமானவர்களால் வாங்கி தரப்படும் நகைகள், அல்லது நமக்கு பிடித்த நெருக்கமானவர்களை ஞாபகப்படுத்தும் நகைகள் எப்போதும் மனதிற்கு இதம் தருபவையாகவே இருந்து வருகிறது.

அந்தவகையில் கனடாவை சேர்ந்த அமாண்டா பூத் (Amanda Booth) என்ற பெண்மணி மனதிற்கு பிடித்தமானவர்களிடம் தங்களது காதலை வெளிப்படுத்துவதற்காக வித்தியாசமான முறையில் அபரண நகைகளை வடிவமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அது என்வென்றால், அமாண்டா பூத்(Amanda Booth) என்ற கனடா பெண்மணி தனது கணவரின் விந்தணு மாதிரிகளை சேகரித்து அபரண நகையாக வடிவமைத்துள்ளார். ஜிஸ்ஸி ஜூவல்லரி (jizzy jewellery) என்ற முறையினை அமாண்டா பூத் முதலில், தனது சொந்த கணவரிடம் இந்த சோதனையை செயல்முறையை பரிசோதித்துள்ளார்.

கடந்த மாதம் ஜிஸ்ஸி துண்டுகள் தயாரிப்பது தொடர்பான வீடியோவை டிக்டாக்கில் வெளியிட்டதன் மூலம் அவை பிரபலமடைந்து அமாண்டா பூத் வடிவமைக்கும் நகைகளுக்கு தற்போது ஏராளமான வரவேற்பு கிடைத்ததுடன் மட்டுமில்லாமல் நகை வடிவமைப்பதற்கான விண்ணப்பங்களும் குவிந்து வருகிறது.

இவ்வாறு ஜிஸ்ஸி ஜூவல்லரி நகைகளுக்கு வாடிக்கையாளரான Espy, தானும் தனது கணவரும் எளிய முத்து பதக்கத்தை ஏற்பாடு செய்ய கூறினோம், அது தங்களது உறவின் மேலாதிக்கம், உரிமை குறிக்கும் ஒன்றாக இருக்க விரும்புனோம் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு இந்த நகை விற்பனை தொடங்கிய அமாண்டா தற்போது, மனிதர்களின் உடல் திரவங்கள் மற்றும் சாம்பல் இருந்து அணியக்கூடிய சிற்பங்கள் மற்றும் டிரிங்கெட்டுகளை உருவாக்குகிறார்

மேலும் தாய்ப்பால், அன்புக்குரியவர்கள் அல்லது செல்லப்பிராணிகளின் தகனம் செய்யப்பட்ட எச்சங்கள், ரோமங்கள் மற்றும் முடி ஆகியவற்றை கொண்டு நகை வடிவமைத்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *