Whatsapp இல் இனி ஆஃப்லைனிலும் இயக்க முடியும்!

வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் வசதிக்காக அவ்வப்போது புதிய அப்டேட்களை செய்து வருகிறது.

இந்த வரிசையில் தற்போது லேப்டாப் மற்றும் டெக்ஸ்டாப்பில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதற்கான மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது.

முன்னதாக Windows மற்றும் Mac மடிக்கணினிகளில் வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டும் என்றால் QR குறியீட்டைக் கொண்டு பயனர்களின் போனை ஸ்கேன் செய்து பயன்படுத்தலாம்.

ஆனால் தற்போது வின்டோஸ் நெட்டிவ் Windows Native செயலியின் மூலம் நம்பகத்தன்மை மற்றும் வேகம் இரண்டும் அதிகரிப்படும் என வாட்ஸ் அப் தெரிவித்துள்ளது.

எனவே யூசர்கள் தங்கள் ஃபோன்கள் ஆஃப்லைனில் இருந்தாலும் Windows மற்றும் Mac மடிக்கணினிகளில் WhatsApp அறிவிப்புகள் மற்றும் செய்திகளைப் பயன்படுத்த முடியும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *