சர்வதேச பேச்சுப்போட்டியில் சம்மாந்துறை மாணவி வெற்றி!

உலகலாவிய ரீதியில் 26 நாடுகளை உள்ளடக்கி இடம்பெற்ற சர்வதேச பேச்சுப்போட்டியில் சம்மாந்துறையை சேர்ந்த மாணவி ஜலீல் பாத்திமா மின்ஹா வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்கொட்லாந்து சங்க இலக்கிய ஆய்வு நடுவம் நடாத்திய 06 – 10 வயதினருக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை சார்பில் சம்மாந்துறை அல்- அர்சத் மகா வித்தியாலய மாணவி ஜலீல் பாத்திமா மின்ஹா கலந்துக்கொண்டு வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவர் சம்மாந்துறை பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் துறைசிறார் கலைக்கழகத்தின் பிரதித்தலைவியாகவும், பிரதேச செயலாளர் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ரீதியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பயிற்சியளித்த ஆசிரியர்கள் மற்றும் அவரது பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் கௌரவிப்பு விழாவினை ஏற்பாடு செய்து கௌரவித்துள்ளது.

குறித்த மாணவி தமிழ் நாட்டு இலக்கிய கழகம் வழங்கிய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் கனவுக்கண்ணி விருது, தமிழ் நாட்டு அரசின் இளமாமணி காந்தி விருது மற்றும் தமிழ்நாடு அரசு வழங்கிய சிறந்த மாணவர் விருது போன்றவைகளையும் சுவீகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *