இளவரசி டயானாவின் மரணம் விபத்து அல்ல பிரபல சட்டத்தரணி தெரிவிப்பு!

பிரித்தானிய இளவரசி டயானா, பிரான்சில் உள்ள சுரங்கப்பாதை ஒன்றில் நிகழ்ந்த விபத்தொன்றில் உயிரிழந்தார்.

ஆனால், அது விபத்து அல்ல, அது தொடர்பான பல கேள்விகள் விடையளிக்கப்படாமலே உள்ளன என்கிறார் சட்டத்தரணியான Michael Mansfield என்பவர்.

முதலில் தனியார் புகைப்படக்காரர்கள் டயானாவைத் துரத்தியதால் விபத்து நிகழ்ந்தது என கூறப்பட்ட நிலையில், விசாரணையில், அந்த சுரங்கப்பாதைக்குள் எந்த புகைப்படக்காரரும் டயானாவின் காரை பின்தொடர அனுமதிக்கப்படவில்லை என பின்னர் தெரியவந்துள்ளது.

ஆக, அது விபத்தும் அல்ல, டயானா விபத்திலும் கொல்லப்படவில்லை என்று கூறும் Michael, சம்பவம் நடந்தபோது அந்த சுரங்கப்பாதைக்குள் இரண்டு வாகனங்கள் இருந்தன என்கிறார்.

ஒரு கார் டயானாவின் காரை முன்னேறவிடாதபடி தடுத்து அதன் முன்னே சென்று கொண்டிருந்திருக்கிறது. ஒரு மோட்டார் சைக்கிள் டயானாவின் காரை பின்தொடர்ந்தே வந்துள்ளது.

அந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளை இயக்கியது யார், அந்த வாகனங்கள் குறித்த ந்த தகவலும் வெளிவராதது ஏன் என கேள்வி எழுப்பும் Michael, டயானா வழக்கில் பதில் கிடைக்காத பல கேள்விகள் உள்ளன. அவற்றிற்கான விடை தெரிந்தாகவேண்டும் என்கிறார். 

டயானாவின் வழக்கு முடிவடையவில்லை என்று கூறும் Michael, அது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும், அப்போதுதான் உண்மைகள் வெளிவரும் என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *