உக்ரைனிய வீரரின் மண்டை ஓட்டை கையில் வைத்து பிரச்சாரம் செய்த ரஷ்ய கூலிப்படை!

உக்ரைனிய வீரரின் மண்டை ஓட்டை கையில் வைத்துக்கொண்டு, உக்ரைனியர்களை கொன்று அழிக்க வேண்டும் என்று ரஷ்ய கூலிப்படையினர் பேசியுள்ளார்.

கையில் இருக்கும் மண்டை ஓடு, மரியுபோலில் உள்ள எக்கு ஆலையில் கொல்லப்பட்ட உக்ரைனிய சிப்பாயுடியாது என்று அவர் கூறியுள்ளார்.

உக்ரைனில் எக்கு ஆலையில் கொல்லப்பட்ட உக்ரைனிய வீரரின் மண்டை ஓட்டை கையில் வைத்து ரஷ்யா கூலிப்படையினர் ஒருவர் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரஷ்ய கூலிப்படையானரில் ஒருவரான இகோர் மங்குஷேவ், உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள அசோவ்ஸ்டல் பகுதியில் இருக்கும் எக்கு ஆலையில் கொல்லப்பட்ட உக்ரேனிய சிப்பாயின் மண்டையோட்டை கையில் பிடித்தபடி நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினார்.

அப்போது, பேசிய இகோர் மங்குஷேவ், உக்ரைனிய வீரரின் மண்டை ஓட்டை கையில் உயர்த்தி காண்பித்தபடி, “நாங்கள் உயிருடன் இருக்கிறோம், ஆனால் இந்த ஆள் ஏற்கனவே செத்துட்டான். அவன் நரகத்தில் எரியட்டும். அவன் அதிர்ஷ்டசாலி இல்லை. அவனுடைய மண்டையிலிருந்து ஒரு கோப்பையை உருவாக்குவோம்” என்று கூறினார்.

மேலும், ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனுக்கு அனுப்பப்பட்டதற்கான காரணத்தை இகோர் மங்குஷேவ் விளக்கினார்.

“நாங்கள் இரத்தமும் சதையுமான உக்ரைனிய மக்களுடன் போரில் ஈடுபடவில்லை. உக்ரைன் ஒரு ரஷ்ய எதிர்ப்பு நாடு என்ற எண்ணத்துடன் நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளோம்.., உக்ரைனை நாம் அழித்தே ஆகவேண்டும்., அந்த அன்னத்துடன் இருக்கும் ஒவ்வொரு உக்ரைனியரையும் கொல்ல வேண்டும்” என்று மங்குஷேவ் பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *