Phoenix 2022 ஆம் ஆண்டுக்கான தொழிற்துறை சேகரிப்பினை கையாளுவதற்காக வடிவமைக்கப்பட்ட Crates மற்றும் Pallet களை அறிமுகப்படுத்தியது!

பல்வேறுபட்ட சந்தை பிரிவுகளுக்கு ஏற்ற பொருட்களை வழங்கிடும் Phoenix, அதன் தொழிற்துறை அளவிலான Crates மற்றும் Palletகளை அறிமுகப்படுத்தியது. இது குறிப்பாக பரந்தளவிலான பொருட்களை வசதியாகவும் பாதுகாப்பாகவும் கையாளும் நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்டு தயாரிப்பு செய்யப்படுகிறது. Phoenix Crates மற்றும் Pallets உங்கள் வாழ்வினை ஸ்மார்ட் ஆகவும் தடையற்ற ரீதியில் இலகுவாக கையாளுவதற்கு தீர்வாகவும் அமையும்.

நிறுவனமானது 2022ஆம் ஆண்டுக்கான Crates மற்றும் Palletகளின் பட்டியலை வெளியிட்டது. இது கிடைக்கக்கூடிய தயாரிப்பு தெரிவுகளை முழுமையாகக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் கால்நடைகள், உணவு மற்றும் குடிபான வகைகள், கடல்சார் தொழில் போன்ற பல்வேறு தொழிற்துறைகளின் கிடங்கு (Warehouse) மற்றும் போக்குவரத்து செயற்பாடுகளை மேம்படுத்த இந்த பாரிய உற்பத்தித் தெரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

தமது வாடிக்கையாளர்களுடன் இணைந்து அவர்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட நிலையான மற்றும் வட்டச்சுழற்சி தீர்வுகளையும் உருவாக்குகிறது. வட்டச்சுழற்சி பொருளாதாரத்தில் 12 வருடகால அனுபவத்துடன் விளங்கும் Phoenix, வாடிக்கையாளர்கள் பாவித்த மற்றும் சேதமடைந்த crateகளை அதன் பாவனை கா லம் முடிந்த பின்னர் சேகரிக்கின்றனர். பின்னர் புதியவற்றை தயாரிக்க, பழைய crateகளை நொறுக்கி, கிருமிநீக்கம் செய்யப்பட்டு பிளாஸ்டிக் கழிவினை பூஜ்ஜியமாக்கி அல்லது சுற்றுச் சூழலுக்கு வெளியிடாமல் முற்றிலும் மூடிய வளையத்தை உருவாக்குகிறது.

இலங்கையில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு வர்த்தக நாமங்களில் ஒன்றான Phoenix, 43 வருடங்களுக்கும் மேலான பாரம்பரியத்தை அனுபவித்து வருவதுடன்,
வாழ்க்கைக்காக வடிவமைக்கப்பட்டுள்ளவை என்பதுடன் அன்றாட வாழ்வில் சிறந்த பங்காளியாகவும் விளங்குகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *