பாடசாலை மாணவர் அணிந்திருந்த காலணிக்குள் பாம்பு!

கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயதுடைய மாணவர் ஒருவர் அணிந்திருந்த காலணிக்குள் சிறிய பாம்பு ஒன்று இன்று (23) காலை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த மாணவர் பாடசாலைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது​​ அவருடைய ஒரு காலணிக்குள் ஏதோ நெளிவதை உணர்ந்துள்ளார்.

பின்னர் பாடசாலைக்கு வந்து தனது காலணியைக் கழற்றியுள்ளார். அதன்போது அதற்குள் சிறிய பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளது.

மருத்துவர் விடுத்த அறிவுறுத்து

இதனையடுத்து மாணவரை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் பாடசாலை நிர்வாகம் அனுமதித்துள்ளது. 

இது தொடர்பில், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது குறித்த பாம்பினால் மாணவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதியானதாக பணிப்பாளர் டாக்டர் ஜே.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர், காலணிகளை அணிவதற்கு முன்னர் அதனை உட்பக்கமாக பரிசோதிக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *