பாலியல் சீண்டல் குற்றமில்லை நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!

பாலியல் சீண்டல் தொடர்பிலான வழக்கொன்றில், நீதிபதி பரபரப்பான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார்.

கேரள எழுத்தாளர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில், குற்றஞ்சாட்டிய பெண் பாலியல் இச்சையை துாண்டும் விதமாக ஆடை அணிந்து இருந்ததால், சட்டப்பிரிவு 354ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது’ என கருத்து தெரிவித்த நீதிமன்றம், எழுத்தாளருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

கேரளா மாநில எழுத்தாளர் சிவிக் சந்திரன், 74. மாற்றுத் திறனாளியான இவர், கோழிக்கோடு மாவட்டம் கொயிலானி கடற்கரையில் வைத்து, 2020 பிப்ரவரியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம் பெண் எழுத்தாளர் ஒருவர் ​பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் அளிக்க கோரி எழுத்தாளர் சிவிக் சந்திரன், கோழிக்கோடு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் புகார் கொடுத்துள்ள பெண், தன் மடி மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் சிவிக் சந்திரன் இணைத்துள்ளார். இந்த வழக்கில் சிவிக் சந்திரனுக்கு சமீபத்தில் முன் ஜாமீன் வழங்கப்பட்டது.

தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முன் ஜாமீன் கோரி மனுதாரர் தாக்கல் செய்த மனு மற்றும் இணைக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, புகார் தெரிவித்த பெண் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார். அந்த ஆடை, பாலியல் இச்சையை துாண்டும் வகையில் உள்ளது.

இந்நிலையில், 74 வயதான மாற்றுத்திறனாளி நபர், புகார் அளித்த பெண்ணை தன் மடியில் வலுக்கட்டாயமாக அமரவைத்து, பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறுவதை நம்ப முடியவில்லை. எனவே, பாலியல் பலாத்கார வழக்குகளுக்கான சட்டப்பிரிவு 354ஏ, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது. எனவே, மனுதாரருக்கு முன் ஜாமீன் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *