தலையில் 2 சிலிண்டர்கள் கையில் இந்தியக் கொடியுடன் அசத்திய இளைஞன்!

200 ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டிஷ் காலனித்துவத்தின் பிடியில் இருந்து ஆகஸ்ட் 15, 1947 அன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது.

இன்று நம் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றான நமது நாடு (இந்தியா) திகழ்கிறது.

நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் சுதந்திர தினத்தைப் பற்றிய உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்துள்ளது. அதன்படி சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலெல்லாம் இருந்து விதவிதமான படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவருகின்றன.

இளைஞரின் அசத்தல்

அந்த வகையில், ஒரு இளைஞன் மூவர்ணக் கொடிக்கு மரியாதை செலுத்தும் காட்சியைக் காணலாம். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

அந்த இளைஞர் தலைக்கு மேல் ஒரு பாட்டிலை வைத்து அதற்கு மேல் இரண்டு சிலிண்டர்களை வைத்து, மூவர்ண கொடியை ஏந்தியவாறு நிற்கிறான். இந்த வீடியோ காண்போரை வாயடைக்க வைத்திருக்கிறது.

மேலும், ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற அமைப்பு, சமீபத்தில் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்தி பூமியின் குறைந்த தூர வட்டபாதையில் நிலைநிறுத்தியது.

பூமிக்கு வெளியே பறந்த தேசிய கொடி
ஆசாதிசாட் என்ற பெயரிலான இந்த செயற்கைக்கோள் தயாரிப்பு பணியில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதன் அடையாளம் ஆக நாடு முழுவதிலும் இருந்து 750 மாணவிகள் பங்கு கொண்டனர்.

இந்தியாவுக்கு இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்குடனும் மற்றும் குழந்தைகளிடையே எல்லைகளற்ற உலகு பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்குடனும், இந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மேலும், சுதந்திர திருநாள் பெருவிழாவின் ஒரு பகுதியாக, பூமியில் இருந்து 1 லட்சத்து 6 ஆயிரம் அடி உயரத்தில் பலூன் ஒன்றின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்ட தேசிய கொடி பின்னர் பறக்க விடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *