தேவாலயத்தில்ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் அதிகமானோர் மரணம்!

எகிப்தியத் தலைநகர் கைரோவின் புறநகர்ப் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட மோசமான தீச்சம்பவத்தில் 40க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

அபு சிஃபின் (Abu Sifine) எனும் அந்த தேவாலயத்தில் கூட்டு வழிபாட்டின்போது தீப்பற்றியதற்கான காரணம் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்தி, நிலைமையைச் சீராக்க ஆன அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாய் ஜனாதிபதி Abdel Fattah Al-sisi கூறினார்.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சம்பவத்தில் 14 பேர் காயமடைந்ததாக எகிப்திய சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாயின.

எகிப்தின் 103 மில்லியன் மக்கள்தொகையில் குறைந்தது 10 மில்லியன் பேர் Copts எனும் மிகப்பெரிய கிறிஸ்துவ சமூகத்தைச் சேந்தவர்கள்.

மத்திய கிழக்கின் மிகப் பெரிய முஸ்லிம் நாடுகளில் ஒன்றான எகிப்தில் சிறுபான்மையினரான அவர்கள் தாங்கள் தாக்கப்படுவதாய்ப் பல காலமாய்க் குறைகூறுகின்றனர்.

முறையான வீடமைப்பு இல்லாத கைரோவின் புறநகர்ப் பகுதிகளில் இத்தகைய தீச்சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *