உலகின் மிகப்பெரிய பூனை!

உலகின் மிகப்பெரிய பூனை என வெள்ளை நிற பூனையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பது என்பது பலருக்கும் அதீத பிரியம் இருக்கும்.

அதிலும் பூனைகள் வளர்ப்பது என்றால் பலருக்கும் பிடிக்கும். சில வீடுகளில் பூனைகளை கடவுளாக வழிபட்ட மக்களும் இருந்திருக்கிறார்கள்.

அந்த வகையில், மிகப்பெரிய பூனை பற்றி தான் இங்கு தெரிந்துகொள்ளபோகிறோம். அந்த பூனையின் பெயர் கூன்ஸ் (Maine Coons) இந்த பூனை ஆனது பழங்கால பூனை இனங்களில் ஒன்றாகும்.

இந்த இன பூனைகள் மிகப்பெரிய உடல் அமைப்பை பெற்றிருக்கின்றன. பூர்வீகமனாது வட அமெரிக்கா. இவை பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் பெரியதாக இருந்தாலும் இவை மக்களுடன் மிகவும் பாசத்துடன் பழக்கூடியவை என்கிறார்கள் நிபுணர்கள்.

இந்நிலையில், ரஷ்யாவை சேர்ந்த யூலியா மினினா என்ற பெண் வீட்டில் இந்த பூனையை வளர்த்து வருகிறார். அந்த பூனைக்கு கெஃபிர் எனப் பெயர்சூட்டியுள்ளார் மினினா. இவற்றின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம்.

இதனாலேயே ஆயிரக்கணக்கான மக்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து பேசிய அவர், “எங்களுடைய வீட்டில் ஒருவர் போல கெஃபிர் வசிக்கிறது. பலரும் முதன்முறை கெஃபிரை பார்க்கும்போது அதனை நாய் என நினைத்துவிடுகின்றனர்.

மேலும், என்னுடைய இரண்டு வயது மகள் அனெச்காவும் எங்களுடைய கெஃபிரும் விளையாடிக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு இந்த விளையாட்டுகள் சலிப்பதே இல்லை. எப்போதும் கெஃபிருக்கான உணவை எனது மகளே கொடுத்து வருகிறாள். சொல்லப்போனால் இருவரும் சிறந்த நண்பர்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்த பூனை சராசரியாக 2 வயது சிறுவனின் உயரம் கொண்டது. பார்ப்பதற்கு அச்சமூட்டும் வகையில் இருந்தாலும் இது மிகவும் பாசமான பூனை என்கிறார் மினினா. செல்ல பூனையின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலை தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *