கணவரை இளமையாக கவனித்து கொள்ள மூன்று இளம்பெண்கள் தேவை மனைவியின் வினோத விளம்பரம்!

இளம்பெண் ஒருவர் தன் கணவரை பார்த்துக் கொள்ள 3 பெண்கள் வேலைக்கு தேவை என விளம்பரம் செய்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்து நாட்டை சேர்ந்த பதீமா(44) என்ற பெண் தன் கணவரை கவனித்து கொள்வதற்காகவும், அவரை திருப்திபடுத்துவதற்காகவும் மூன்று இளம்பெண்கள் தேவை என விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும், அவர்களுக்கு ஊதியமாக ரூ. 33,800 சம்பளமாக நிர்ணயித்து உள்ளார். இதுகுறித்து பேசிய அப்பெண், “அயராது உழைக்கும் எனது கணவரை பார்த்துக்கொள்ள 3 பெண்கள் தேவை. அவர்கள் இளமையாகவும், படித்தவர்களாகவும், இருக்க வேண்டியது அவசியம். திருமணம் ஆகாதவர்களாகவும் இருக்க வேண்டியது முக்கியம்.

அதற்காக உங்களுக்கு மாதம் ரூ.33,800 சம்பளம் கிடைக்கும். இதுமட்டுமின்றி இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு கிடைக்கும். உங்களுக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் வராது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

இருவர் என் கணவரின் அலுவலகப் பணிகளில் உதவியாக இருக்க வேண்டும். மீதமுள்ள ஒருவர் என் வீட்டை கவனிப்பதோடு என் கணவர் மற்றும் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டும்.

அவரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு குழந்தை இருக்க கூடாது, அது ஒரு தடையாக அமையும். கடுமையாக உழைக்கும் என் கணவரின் மகிழ்ச்சிக்காகவே இவை அனைத்தையும் செய்கிறேன்.

அவரை அனைத்து வகையிலும் கவனித்து நிம்மதியாக வைத்து கொள்ள எனக்கு ஆட்கள் தேவை”.என தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரம் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்த, அவரது கணவர் பட்டகோர்ன் கூறியதாவது, “என்னை கவனித்துக்கொள்ள யாரையாவது தேர்வு செய்ய வேண்டும் என என் மனைவி என்னுடம் தெரிவித்தாள்.

அந்த பெண்கள் குடும்ப பெண்கள் போலவே நடத்தபடுவார்கள். மேலும் எங்கள் நிறுவனத்தில் குடும்ப பெண்கள் போலவே வேலை செய்வார்கள். என்னைப் போல் இருக்க விரும்பும் மற்ற ஆண்கள் தங்கள் மனைவிகளிடம் இது பற்றித் தெரிவிக்க வேண்டும்.

அவர்கள் தங்கள் மனைவிகளிடம் அனுமதி கேட்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் பிரச்சனைகள் இருக்காது என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *