பிரதமராகிறார் கோட்டா கடும் எதிர்ப்பில் ஜனாதிபதி ரணில்?

சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. 

எனினும் கோட்டாபயின் வருகையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

நாடு திரும்பும் கோட்டபாயவுக்கு பிரதமர் பதவி வழங்குவது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பில் அண்மையில் சமகால பிரதமர் தினேஷ் குணவர்த்தன, பொதுஜனபெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தார். 

இதன்போது பிரதமர் பதவியை விட்டுக்கொடுக்க இணக்கம் வெளியிட்டுள்ளார். எனினும் இதற்கு ஜனாதிபதி கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருகிறார். 

கோட்டாபய நாடு திரும்பினால் மற்றுமொரு வன்முறை வெடிக்கும் என அவர் எச்சரித்துள்ளார். 

ஒருவேளை கோட்டபாயவுக்கு பிரதமர் கொடுக்கப்பட்டால் அரசியல் களம் மிகவும் பரபரப்பானதாக இருக்கும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில், பிரதமராக ரணில் விக்ரமசிங்க இருந்தார். அந்தக்காலப்பகுதியில் இருவருக்கும் இடையில் கடும் மோதல் நிலைமை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *