இறந்த பன்றிக்கு உயிர்கொடுத்து விஞ்ஞானிகள் சாதனை!

இறந்த பன்றி ஒன்றை உயிரோடு எழுப்பி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்க பல்கலைக்கழக விஞ்ஞான குழு ஒன்று பன்றிகளை வைத்து 2019-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அதாவது செயற்கை முறையில் பன்றிகளுக்கு மாரடைப்பை தூண்டி அவற்றி இயக்கத்தை நிறுத்தியுள்ளது.

இப்படி இறந்த பன்றிகளை ஒரு மணிநேரம் வைத்திருந்து பன்றிகளின் சொந்த ரத்தத்தை ஒரு திரவத்துடன் கலந்து உடல்களில் பம்ப் செய்துள்ளனர்.

பன்றிக்கு செயற்கை மாரடைப்பு
இந்த செயலின்போது, ரத்த அணுக்களுக்கு ஆக்சிஜனை சுமந்துசெல்லும் ஹீமோகுளோபினும் செலுத்தப்பட, ரத்தம் கட்டியாகுதலை தடுத்து செல்களை பாதுகாக்கும் மருந்துகளும் செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து 6 மணிநேர சோதனைக்கு பின் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற உறுப்புகளில் இருந்த செல்கள் செயல்பட ஆரம்பித்துள்ளன.

மீண்டும் உயிர்பிழைத்த பன்றி
மேலும், பன்றிகளின் தலைகளில் அசைவும் தெரிந்துள்ளது. இந்த சம்பவம் விஞ்ஞானிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த சோதனை சமீபத்திய ஆண்டுகளில் நடத்தப்பட்ட முக்கியமான அறிவியல் மைல்கல் என்றே அறியப்படுகிறது.

இந்த ஆய்வு ஆனது நேச்சர் இதழில் வெளியாகி உலக அறிவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இறப்பே இல்லாத மனிதன்
தொடர்ந்து, இறந்த செல்கள் உயிர்பெறுவது என்பது கிட்டத்தட்ட இறந்த உயிருக்கு மீண்டும் உயிர் கொடுப்பது போன்றது. இத்தகைய ஆய்வு தொடர் வெற்றி பெற்றால் இறப்பே இல்லாத நிலைக்கு மனிதர்களை கொண்டுசெல்லலாம் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இறந்த மனிதரை உயிரோடு கொண்டுவர முடிந்தாலும், அவர் கோமாவில் விழுந்த மனிதரை போல நடைபிணமாக மட்டுமே இருப்பார் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *