சீனா 51 மில்லியன் டொலர் கடனை நிறுத்தியதால் நெருக்கடியில் இலங்கை!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதல் கட்ட கட்டுமானத்திற்கு தேவையான 51 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை சீன அரசுக்கு சொந்தமான எக்ஸிம் வங்கி நிறுத்தி வைத்துள்ளது, இது அரசாங்கத்தை புதிய நெருக்கடியில் தள்ளியுள்ளது, என Sunday times செய்தி வெளியிட்டுள்ளது.

கடவத்தைக்கும் – மீரிகமவுக்கும் இடையிலான 37 கிலோமீற்றர் தூரத்தை உள்ளடக்கிய திட்டத்தில் பணிபுரிந்த சுமார் 500 சீனர்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கியுள்ளதாகவும், இதன் விளைவாக உள்ளூர் மக்களின் 2000 வேலைகள் ஆபத்தில் இருப்பதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைக் கருத்தில் கொண்டு சீனாவின் எக்ஸிம் வங்கியின் நிதி விடுவிப்பு முக்கியமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திறைசேரி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடனை இடைநிறுத்துவது திட்டத்தின் தாமதத்தை விளைவிக்கும், மேலும் சீனாவின் உலோகவியல் கட்டுமான நிறுவனத்திடமிருந்து (MCC) இலங்கை அரசாங்கத்திற்கு அபராதம் விதிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்தன.

2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த வேலைகளை முடிப்பதாக 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்தின் 33 பில்லியன் ரூபா நிதியில் இதுவரை சுமார் 32 வீதமான வேலைத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை (RDA) நிதியமைச்சின் வெளி வளத் திணைக்களத்துடன் இந்த விடயத்தை எடுத்துக்கொண்டதாக சண்டே ரைம்ஸ் அறிகிறது.

வீதி பணிகளின்போது பாறைகளை வெடிக்கத் தேவையான டீசல் மற்றும் வெடிமருந்துகள் இல்லாததால் சமீபத்திய மாதங்களில் திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 40,000 லற்றர் டீசல் தேவை.

மேலும்”பொருளாதார நிலைமை மேம்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும் மற்றும் திட்டத்தை தொடர கடன்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று நிதி அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நிதி நெருக்கடியால் நாட்டில் பல இடங்களில் தொடங்கப்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *