உணவுப் பொதி மற்றும் தேனீர் விலை குறைகிறது!

சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைவடைந்ததைத் தொடர்ந்து, உணவுப் பொதி மற்றும் தேநீர் கோப்பையின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், கடந்த நாட்களை விடவும் பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறி, பழங்கள் மற்றும் மீன்களின் விலைகள் இன்று (06) அதிகரித்துக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்துக்கான எரிபொருள் கொள்வனவில் உள்ள சிரமங்கள் காரணமாகவும், மழையுடனான வானிலை காரணமாகவும் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருந்தபோதிலும், கடந்த நாட்களை விடவும் இன்று மெனிங் சந்தைக்கு சென்ற நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.