இலங்கையில் அதிரவைக்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்2 மாதங்களில் 23 பேர் பலி!

கடந்த மே 30ம் திகதி முதல் இன்று (05) வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 21 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆகும்.

இந்த கொலைகளுக்கான மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் இலக்க தகடுகள் திருடப்பட்டதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காலி, திஸ்ஸமஹாராமய, அஹுங்கல்ல மற்றும் கதிர்காமம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மோட்டார் சைக்கிள் இலக்கத் தகடுகள் திருடப்படுவது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் நிலையங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

மேற்படி பகுதிகளில் இருந்து திருடப்பட்ட வாகனங்களின் இலக்கத் தகடுகள் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் இலக்க தகடுகள் திருடப்படுவது, இதுபோன்ற குற்றங்களைச் செய்வதற்கான முன்திட்டமா என்ற சந்தேகத்தையும் பொலிஸார் எழுப்புகின்றனர்.

இலக்க தகடு திருடு போனால் உடனடியாக அருகில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *