லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல நகைக்கடை உரிமையாளர்!

லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக சினிமாவில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல நகைக்கடை உரிமையாளர்…!
லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக பிரபல நகைக்கடை உரிமையாளர் கிரண்குமார் சினிமாவில் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல துணிக்கடை, நகை மற்றும் பர்னிச்சர் உள்ளிட்ட கடைகளை நடத்தி வருபவர் சரவணன் அருள். அவர் தனது விளம்பர படங்களில் தானாக நடித்து ட்ரெண்ட் ஆனவர். சமீபத்தில் லெஜண்ட் சரவணன் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கினார். தானே தயாரித்த படத்தின் அவரே ஹீரோவாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் லெஜண்ட் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது.

திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்த சரவணன் அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு அடித்த படத்தில் நடிப்பதற்கான வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் பிரபல நகைக்கடை உரிமையாளர் கிரண்குமார் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வேகமாக பரவி வந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் லெஜண்ட் சரவணனுக்கு போட்டியாக கிரண் குமார் சினிமாவில் களமிறங்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பலரும் கமெண்ட் செய்து வந்தனர்.

இந்த நிலையில், இது குறித்து கிரண்குமார் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார். அதில் “தனக்கு சினிமாவிற்கு வரும் எண்ணம் சுத்தமாக இல்லை என கூறியுள்ளார். மேலும், தன்னால் நடனம் ஆட முடியாது என்றும், தற்போது தான் இருக்கும் இடமே போதும் என்றும் கூறி” தன்னை பற்றி சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு கிரண்குமார் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *