முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 30 லீற்றர் பெற்றோல்!

பொது போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 30 லீற்றர் பெற்றோல் வழங்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது வழங்கப்படும் 5 லீற்றர் பெற்றோல் எவ்வகையிலும் போதுமானதல்ல எனவும் அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார் .

ஏனைய பொதுப் போக்குவரத்து சேவைகளைப் போன்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முச்சக்கரவண்டிகளையும் உள்வாங்க வேண்டும், இல்லையெனில் இலட்சக்கணக்கான முச்சக்கர வண்டி ஊழியர்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படுவார்கள் .

பொதுப்போக்குவரத்தில் ஈடுபடாத முச்சக்கர வண்டிகளுக்கு வாரத்திற்கு 5 லீற்றர் வழங்க முடியும் . அதேசமயம் முச்சக்கர வண்டிகள் உண்மையில் போக்குவரத்தில் ஈடுபடுகின்றனவா என்பதை இலகுவாக கண்காணிக்கும் தொழில்நுட்பம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *