இலங்கையின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம்!

இலங்கையின் வரலாற்றில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 2022 ஜூலை மாதம் பதிவாகியுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான 12 மாதங்களில் இலங்கையின் பணவீக்கம் 60.8 வீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணவீக்க அதிகரிப்பு

இதற்கமைய, இரண்டு வருட பண அச்சிடும் நடவடிக்கையின் பின்னர் நாணயத்தின் வீழ்ச்சிக் காரணமாகவே இந்த பணவீக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை 12 மாதங்களில் உணவுக் குறியீடு 90.9 சதவீதமாக இருந்தது. 2015 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட நாணய நெருக்கடியின் வெளியீட்டு இடைவெளியை நிரப்புவதற்காக கடந்த இரண்டு வருடங்களாக இலங்கையின் மத்திய வங்கி பணத்தை அச்சிட்டுள்ளது.

இதன் காரணமாக அமெரிக்க டொலர் 200ல் இருந்து 360 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை பணவீக்கம் 75 சதவீதமாக உயரக்கூடும் என்று மத்திய வங்கி கூறியுள்ளது.

அத்துடன் போக்குவரத்துப் பணவீக்கம் 143.6 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *