இறுதிச்சடங்கில் மோதிக்கொண்ட இரு நாட்டு பாதிரியர்கள்!

உக்ரைன் ரஷ்யாவுக்கிடையேயான போரில் உயிரிழந்த உக்ரைன் வீரர் ஒருவரின் இறுத்திச்சடங்கின்போது, இரு நாட்டு பாதிரியார்களும் கைகலப்பில் ஈடுபட்ட ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உக்ரைனிலுள்ள Tomashpil என்ற இடத்தில் போரில் உயிரிழந்த Oleksandr Ziniv (42) என்னும் உக்ரைன் வீரரின் இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது. Mykolaiv நகரில் ரஷ்யப் படைகளுடன் போரிடும்போது உயிரிழந்துள்ளார் Oleksandr.அவரது இறுதிச்சடங்கின்போது உக்ரைன் பாதிரியாரான Father Anatoly Dudko என்பவர் உரையாற்றியுள்ளார். அவர் தனது உரையின்போது ரஷ்யாவுக்கு எதிராக, குறிப்பாக, மக்கள் ரஷ்ய திருச்சபையை புறக்கணிக்கவேண்டும் என்பது குறித்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இறுதிச்சடங்கின்போது இப்படியெல்லாம் பேசவேண்டாம் என பலரும் கூறியும் Father Anatoly தொடர்ந்து பேசியிருக்கிறார். அதே இறுதிச்சடங்கில் ரஷ்ய திருச்சபையின் பாதிரியாரான Father Mykhailo Vasylyuk என்னும் ரஷ்யரும் பங்கேற்றிருக்கிறார். Father Anatolyயின் பேச்சு கோபத்தை ஏற்படுத்த, அவர் மீது பாய்ந்த Father Mykhailo, தன் கையிலிருந்த சிலுவையாலேயே அவரைத் தாக்கியிருக்கிறார்.

இருவருக்கும் கைகலப்பு ஏற்பட, அங்கிருந்த இராணுவ வீரர்கள் உட்பட மற்றவர்கள் வந்து இருவரையும் பிரித்துவிடவேண்டிய நிலைமை உருவாகியிருக்கிறது.

இறுதிச்சடங்கில் இப்படி இரு நாட்டு பாதிரியார்களும் மோதிக்கொண்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *