விண்வெளிக்கு சென்று வந்த பூனையை கருணை கொலை செய்த விஞ்ஞானிகள்!

பெலிசெட் பாரிஸின் வீதிகளில் கண்டெடுக்கப்பட்ட பூனையாகும். 1960களில் நடத்தப்பட்ட பிரஞ்சு ராக்கெட் புரோகிராமின் அங்கமாக தான் பெலிசெட் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

விண்வெளிக்கு சென்று வந்த விலங்குகள் பற்றி நம்மிடம் கேட்டால் நமக்கு நினைவுக்கு வருவது லைகா என்ற நாய் குட்டி தான். ஆனால், லைகாவையும் தாண்டி பல விலங்குகள் ஆராய்ச்சிகளுக்காக விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பூனை, நாய், சிம்பன்சிகள் கூட அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் பெலிசெட் என்ற பிரஞ்சு பூனை கொஞ்சம் ஸ்பெஷல்.

அக்டோபர் 18 1963ல் பெலிசெட் என்ற ஃபிரஞ்சு பூனை ஒன்று விண்வெளிப் பயணம் மேற்கொண்டது.

பெலிசெட் பாரிஸின் வீதிகளில் கண்டெடுக்கப்பட்ட பூனையாகும். 1960களில் நடத்தப்பட்ட பிரஞ்சு ராக்கெட் புரோகிராமின் அங்கமாக தான் ஃபெலிசெட் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வெரோனிக் ஏ ஜி 1 என்ற ராக்கெட்டில் அனுப்பப்பட்ட ஃபெலிசெட் பூமியிலிருந்து 157 கிமீ தூரம் பயணம் செய்து, 15 நிமிடங்கள் கழித்து பூமிக்குத் திரும்பியது

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நீண்ட நாட்கள் ஃபெலிசெட் உயிருடன் இருக்கவில்லை. விஞ்ஞானிகள், விண்வெளிக்கு சென்றுவந்த பின், அதன் மூளையின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஃபெலிசெட் கருணைக் கொலை செய்யப்பட்டது.

பெலிசெட்டின் இந்த தியாகம் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பது இந்த பூனையை குறித்து அறிந்திருந்தவர்களின் கருத்தாக இருந்து வந்தது. இந்நிலையில், 54 வருடங்கள் கழித்து 2017ல் ஃபெலிசெட்டின் சாதனைக்காக வெண்கல சிலை செய்யப்பட்டது. இந்த சிலை ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள சர்வதேச விண்வெளி பல்கலைக்கழகம், பிரான்ஸில் வைக்கப்பட்டுள்ளது

இதற்கு முன்னர் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் விலங்குகளை விண்ணுக்கு அனுப்பியிருந்தாலும், பூனைகளில் முதன் முதலில் விண்ணுக்குச் சென்றது ஃபெலிசெட் தான்.

பெலிசெட்டுக்கு முன்னர் விண்ணுக்குச் சென்ற விலங்குகளில் லைகா நாயும் அடங்கும். 1957ல் ரஷ்யா லைகாவை விண்ணுக்கு அனுப்பியது. ஆனால் லைகா உயிருடன் பூமிக்கு திரும்பவில்லை. அதிக வெப்பத்தின் காரணமாக லைகா இறந்துவிட்டது.

பெலிசெட் உயிருடன் பூமிக்கு வந்து தரையிறங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *