வாகன வருமான வரி அனுமதிப் பத்திரத்திர இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோக்கும்!

வாகன வருமான வரி அனுமதிப் பத்திரத்திர இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் விநியோக்கும் முறைமை  எதிர்வரும்  29 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், chassi இலக்கம் கொண்ட வாகனங்களை பதிவு செய்வதற்கு இயலாதவர்கள் எதிர்வரும்  29 ஆம் திகதி முதல்  வருமான வரி வருமான வரி அனுமதிப்பத்திரத்தின் அடிப்படையில் பதிவுகளை மேற்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

49 CC மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துபவர்கள் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவினை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

அத்துடன், விவசாய உபகரணங்கள், மின் பிறப்பாக்கிகள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் ஏனைய உபகரணங்களைப் பயன்படுத்துபவர்கள் வாராந்த எரிபொருள் தேவையினை பூர்த்தி செய்வதற்கு  பிரதேச  செயலகங்களில் பதிவு செய்வதுடன், எரிபொருளை கொள்வனவு செய்வதற்கான நிரப்பு நிலையத்தினை பரிந்துரைக்குமாறும்  மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, QR குறியீட்டு முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட Sipetco மற்றும் Lanka IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *