உலக அழிவு தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆய்வாளர்கள்!

உலக அழிவு குறித்த ஒரு புதிய ஆய்வு, நினைத்தத்தை விட மோசமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

நிபுணர்களால் முன்னர் நினைத்ததை விட மோசமானது என்று நம்புகிறது. பிரான்டியர்ஸ் இன் தி எகாலஜி அண்ட் என்விரான்மெண்ட் என்னும் சுற்றுசூழல் குறித்த இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில், சுமார் 3300 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உலகின் எந்த உயிரினங்களையும் பாதுகாக்க மனித குலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உலகளாவிய அளவில் பல்லுயிர் இழப்பு என்று வரும் போது,  இது எத்தனை இனங்கள் அல்லது உயிரினங்கள் அழிந்து போயுள்ளன என்பது குறித்த தெளிவான தகவல் நம்மிடம் இல்லை என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு உயிரினமும் வேகமாக அழிய அழிய உலகத்தின் அழிவு நெருங்கிறது என்பதை மனித குலம் உணர வேண்டும்.

இது வரை அழிந்து போன இனங்கள் குறித்து மினசோட்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வின் இணை ஆசிரியரான பாரஸ்ட் இஸ்பெல் ஒரு செய்திக் குறிப்பில்,  “இனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் வகைகளைக் கருத்தில் கொள்ளும்போது, 1500 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 30% இனங்கள் உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன அல்லது அழிந்துவிட்டன என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

தற்போது மனிதர்கள் பூமியில் மேற்கொள்ளும் சுரண்டல்கள் மற்றும் ஏற்படுத்தும் சுற்று சூழல் பாதிப்புகள் மூலம் உலகம் வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *