9000 நினைவுச் சின்னங்களைச் சேகரித்து கின்னஸ் சாதனை!

90s கிட்ஸின் ஃபேவரெட் ஷோக்களில் ஒன்றுபவர் ரேஞ்சர்ஸ். இதில் காட்சிப்படுத்தப்பட்ட ஆக்ஷன் சீன்கள், சூப்பர் ஹீரோ உடை, அவர்களின் ஸ்பெஷல் பவர் போன்றவற்றிற்கு நாம் அடிமையாக இருந்தோம். முக்கியமாக, இதில் ஹீரோக்களாக நடித்தவர்களை, அவர்கள் அணியும் சூட்டின் நிறத்தை வைத்துத் தான் நாம் தீர்மானித்தோம்.

நம் மனதிற்கு நெருக்கமான நிறத்தில் அவர்கள் உடை அணிந்திருந்தால் அவர் தான் நம் பேவரெட் பவர் ரேஞ்சர்.

இந்த நிகழ்ச்சியில் வருவது போல நாமும் நம் நண்பர்களுடன் இணைந்து பவர் ரேஞ்சர்களாக மாறி விளையாடுவோம். இந்த நிகழ்ச்சியில் வரும் கதாபாத்திரங்களின் பொம்மைகளை எல்லாம் நாம் சேகரித்து வைப்போம்

அப்படி சேகரிக்க ஆரம்பித்த ஒரு நபர், தற்போது கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார். மைக்கெல் நில்சன் என்பவர், இதுவரை வெளியான அனைத்து பவர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சிகள், படங்கள் தொடர்பான பொருட்களை சேகரித்துள்ளார்.

இதில் பொம்மைகள், பவர் ரேஞ்சர்ஸ் பயன்படுத்தும் ஆயுதங்கள், பவர் ரேஞ்சர்ஸ் டிவிடி, புத்தகம் என அனைத்தும் அடங்கும். இதுவரை 28 சீசன்கள், மற்றும் மூன்று படங்கள் பவர் ரேஞ்சர்ஸ் தொடரில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நில்சன் கூறுகையில், “நான் பார்த்ததிலேயே மிக அருமையான நிகழ்ச்சி பவர் ரேஞ்சர்ஸ் தான்” என்றார். இவர் முதன் முதலில் 1993ல் ஒளிபரப்பப்பட்ட பவர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சியைத் தான் பார்த்துள்ளார். அப்போது முதல் தீவிர ரசிகராகிவிட்ட நில்சன், இந்த நினைவுச்சின்னங்களைச் சேகரிக்கத் துவங்கியுள்ளார்.

இவரிடம் தற்போது இருப்பது மொத்தம் 9,364 பவர் ரேஞ்சர்ஸ் கலெக்டிபில்ஸ். இதன் மூலம் அதிக பவர் ரேஞ்சர்ஸ் கலெக்ஷனை வைத்துள்ள நபர் என்ற கின்னஸ் சாதனையும் இவரை வந்தடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *