ஜனாதிபதி கோட்டா தப்பியோட்டத்திற்கான காரணம் வெளியானது!

ஜனாதிபதி பதவியை விலகினால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலகாமல் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மாலைத்தீவில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் வந்தடைந்தார். இலங்கையில் இடம்பெற்ற மக்கள் போராட்ங்களை தொடர்ந்து அவர் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.

சிங்கப்பூர் அரசாங்கம் அவர் தனிப்பட்ட விஜயத்தில் சிங்கப்பூருக்கு நுழைய அனுமதிக்கப்பட்டார் என தெரிவித்துள்ளது. எனினும் கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்து சிங்கப்பூரில் தங்குவாரா அல்லது வெளியேறுவாரா என்பது தொடர்பில் தகவல் தெளிவாக இல்லை என கூறப்படுகின்றது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களின் கோபத்திற்கு மத்தியில் அவர் புதன்கிழமைக்குள் இராஜினாமா செய்வதாக உறுதியளித்தார். ஆனால் இன்றே அவரது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். எனினும் அந்த கடிதத்திலும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை இரவு இராணுவ விமானத்தில் மாலைத்தீவுக்கு தப்பிச் சென்றார் மற்றும் அவரது திட்டங்கள் குறித்து பல ஊகங்கள் காணப்பட்டன. இந்த அவர் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் சவுதி ஏர்லைன்ஸ் விமானத்தில் சிங்கப்பூர் சென்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கோட்டாபய புகலிடம் கேட்கவில்லை மற்றும் அவருக்கு எந்த புகலிடமும் வழங்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் பொதுவாக புகலிட கோரிக்கைகளை வழங்குவதில்லை எனவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம், அவர் தரையிறங்கியதை உறுதிப்படுத்திய நிலையில் தெரிவித்தது.

தான் பதவி விலகினால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் கோட்டாபய இருந்தார் என பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது. இதனால் பதவி விலகுவதற்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என கோட்டாபய திட்டமிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *